சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 13ஆம் நாள் குவாங் டுங் மாநில கட்சி கமிட்டி மற்றும் அரசின் பணியறிக்கையைக் கேட்டறிந்து, பல்வேறு துறைகளில் இம்மாநிலம் படைத்த சாதனைகளைப் பாராட்டினார்.
அவர் கூறுகையில், குவாங்டுங்-ஹாங்காங்-மக்காவ் வளைகுடா பிரதேசம், நாட்டின் புதிய வளர்ச்சி அமைப்பில் நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கொள்கைகளை நன்றாகச் செயல்படுத்தி, குவாங்டுங் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு அளவை ஆழமாக்கும் வாய்ப்பைக் கைபறரி, இப்பிரதேசத்தை உயர் தர வளர்ச்சியின் முன்மாதிரி மண்டலமாகவும், சீன பாணியுடைய நவீனமயமாக்கத்தின் தலைமை மண்டலமாகவும் கட்ட வேண்டும் என்றும், பொது மக்களின் கூட்டுச் செழுமை, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தின் சாரம்சச் சிறப்பாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.