சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு ஜூலை 30ஆம் நாள் நடத்திய கூட்டத்தில் தற்போதைய பொருளாதார நிலைமையை ஆராய்ந்து இவ்வாண்டின் பிற்பாதியில் பொருளாதார பணிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
இவ்வாண்டில், ஷிச்சின்பிங் மையமாகக் கொண்ட கட்சி மத்திய கமிட்டியின் உறுதியான தலைமையில், சீனாவின் பல்வேறு பகுதிகளும் பல்வேறு பிரிவுகளும் இன்னல்களை எதிர்கொண்டு சீர்திருத்தம் மற்றும் திறப்பை ஆழமாக்கியுள்ளன.
ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதோடு, இடர்பாடு மற்றும் அறைகூவல்களைப் பயனுள்ள முறையில் சமாளித்துள்ளன. பொருளாதாரம் நிலையாக வளர்ந்து சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தியுள்ளது என்று இக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டின் பிற்பாதியில் சீர்திருத்த வளர்ச்சியை நிலைநிறுத்துவது மிக முக்கியமானது. புதிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், புதிய வளர்ச்சிக் கட்டமைப்பின் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும். உயர் தரமான வளர்ச்சியை முக்கியமாக முன்னெடுக்க வேண்டும். சீனப் பாணி நவீனமயமாக்கலை முன்னேற்றுவதற்கும் சீர்திருத்தத்தைப் மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவதற்கும் முக்கியத்துவம் அளித்து முழு ஆண்டின் சமூக பொருளாதார வளர்ச்சியின் இலக்குகளை உறுதியாக நனவாக்கப் பாடுபட வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.