சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 16ஆம் நாள் பெரு நாட்டின் லிமாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் “காலப்பொறுப்புகளை பகிர்ந்து கொண்டு ஆசிய-பசிபிக் நாடுகளின் வளர்ச்சியை கூட்டாக முன்னேற்றுதல்” என்ற தலைப்பில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
கடந்த சில பத்து ஆண்டுகளில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் முயற்சியுடன், ஆசிய-பசிபிக் பிரதேசம் பெரும் வளர்ச்சி, பெரும் செழுமை, பெரும் ஒன்றிணைப்பு ஆகியவற்றை நனவாக்கி, உலக பொருளாதாரத்தில் மிகுந்த ஆற்றல் கொண்ட பகுதியாகவும், வளர்ச்சிக்கான முக்கிய இயந்திரமாகவும் மாற்றியுள்ளது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
மேலும், அவர் இந்த உரையில் மூன்று முன்மொழிவுகளை முன்வைத்தார்.
முதலாவதாக, திறப்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு நிலைமையை உருவாக்க வேண்டும். பலத்தரப்புவாதத்திலும் திறப்பான பொருளாதார திசையிலும் ஊன்றி நிற்க வேண்டும். உலக வர்த்தக அமைப்பை மையமாக கொண்ட பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையை உறுதியாக பேணிகாக்க வேண்டும்.
பிரதேச பொருளாதார ஒருமைப்பாட்டையும், தொடர்பு மற்றும் ஒன்றிணைப்பையும் முன்னேற்றுவித்து, ஆசிய-பசிபிக் பிரதேசத்துக்கும் உலகத்திற்கும் இடையேயான பொருளாதார சுழற்சியை முன்னேற்ற வேண்டும். சீனா, திறப்பைப் பயன்படுத்தி சீர்திருத்தத்தை விரைவுப்படுத்தி வருகிறது. தற்சார்ப்பான திறப்பை ஆக்கப்பூர்வமாக விரிவாக்கி, தொலைத்தொடர்பு, இணையம், கல்வி, கலாச்சாரம், மருத்துவம் போன்ற துறைகளில் நியாயமான முறையில் திறப்பை விரிவாக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.
இரண்டாவதாக, பசுமையான புத்தாக்கம் கொண்ட ஆசிய-பசிபிக் வளர்ச்சி இயக்காற்றலை உருவாக்க வேண்டும். புதிய சுற்று அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புரட்சியும், தொழில் துறை சீர்திருத்தங்கள் கொண்ட வாய்ப்புகளை இறுகப் பின்பற்றி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முன்னணி துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் பசுமையான வளர்ச்சி முறை மாற்றத்தை முன்னேற்ற வேண்டும். புதிய தர உற்பத்தி ஆற்றலை சீனா வளர்த்து, பல்வேறு தரப்புகளுடன் பசுமையான புத்தாக்க ஒத்துழைப்புகளை ஆழமாக்கி வருகின்றது என்றார்.
மூன்றாவதாக, அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடைய பொது நலன் கொண்ட ஆசிய-பசிபிக் வளர்ச்சிக் கருத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மூலம், பொருளாதார மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, வளரும் நாடுகளுக்கான ஆதரவை அதிகரித்து, மேலதிக நாடுகள் மற்றும் மக்களுடன், வளர்ச்சிக்கான சாதனைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2026 ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் நாடாக சீனா விளங்கும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பை ஆழமாக்கி, இப்பிரதேசத்தின் மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
பல்வேறு நாடுகள், சீனாவுடன் இணைந்து வளர்ச்சியடைந்து, அமைதியான வளர்ச்சி, பரஸ்பர ஒத்துழைப்பு, கூட்டுச் செழுமை ஆகியவற்றை கொண்ட நவீனமயமாக்கத்தை நனவாக்குவதற்குக் கூட்டாக முயற்சிகளை மேற்கொள்வதை சீனா வரவேற்கிறது என்றும் ஷி ச்சின்பிங் கூறினார்.