நாட்டின் உச்ச அதிகார வாரியமான சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவுற்றது. மூன்றாவது முறை அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷி ச்சின்பிங் நிறைவுக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை என்னென்ன தகவல்களை வெளிக்காட்டுகிறது?
கிராமப்புறத்தில் அடிமட்ட கட்சிக் குழுச் செயலாளர், மாவட்ட கட்சிக் குழுச் செயலாளர், நகராட்சியின் கட்சிக் குழுச் செயலாளர், மாநிலக் கட்சிக் குழுச் செயலாளர் ஆகிய பதவிகளில் ஷி ச்சின்பிங் பணிபுரிந்து வந்தார். பொது மக்களைச் சார்ந்து பொது மக்களுக்குச் சேவைபுரிவது என்ற கருத்தைக் கடைப்பிடித்து செயல்படும் அவர், அரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, பொது மக்களை எப்போதுமே மனதின் உச்ச நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
அவரது உரையில் ஆழ்ந்த வரலாற்றுப் பொறுப்புணர்வையும் உணர்ந்து கொள்ளலாம். புதிய பயணத்தில், தற்காலம் வரலாறு மற்றும் பொது மக்களுக்குப் பயனுள்ள சாதனைகளைப் பெற்று, நாட்டின் கட்டுமானம் மற்றும் தேசிய மறுமலர்ச்சியை முன்னேற்றுவதற்குத் தகுந்த பங்கினையை அளிக்க உள்ளதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
மனிதகுலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது பற்றியும் அவர் தனது உரையில் மீண்டும் விளக்கிக் கூறினார். சீனாவின் வளர்ச்சி உலகிற்கு நன்மை புரிகிறது. சீனாவின் வளர்ச்சியை உலகிலிருந்து விலக்க முடியாது. அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றைப் பின்பற்றி வரும் சீனா, உலகின் அமைதியான வளர்ச்சிக்கு மேலதிக நிலைத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.