சர்வதேச சதுப்புநிலம் மையம் நிறுவ ஒரு உடன்படிக்கை நவம்பர் 6ஆம் நாள் சீனாவின் ஷென்சென் நகரில் கையொப்பமிடப்பட்டது. முதல் தொகுதியான 18 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், இந்த உடன்படிக்கையில் கூட்டாக கையொப்பமிட்டு, இம்மையத்தின் தொடக்க விழாவில் பங்கெடுத்தனர்.
சதுப்புநிலத்தின் பாதுகாப்பு மற்றும் உகந்த முறையிலான பயன்பாடு, தொடர்புடைய பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளை முன்னேற்றுவதற்கான முக்கிய மேடையாக, இந்த மையம் திகழ்கிறது. திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை, கூட்டுக் கட்டுமானம் மற்றும் கூட்டுப் பகிர்வு, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றிப் பெறுதல் ஆகியவற்றைக் கொண்ட சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புமுறையை இம்மையம் உருவாக்கி, உலகத்தில் சதுப்புநிலப் பாதுகாப்பு லட்சியத்தை உயர் நிலைக்கு முன்னேற்றி, ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சிக்கான 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கு ஆக்கமுடன் பங்காற்றும்.
சீனா, இம்மேடையின் மூலம், பல்வேறு உறுப்பு நாடுகளுடனான யிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சதுப்புநில உயிரின அமைப்புமுறையின் தரம் மற்றும் நிலைத்தன்மையை உயர்த்தி, உலக மக்களுக்கு மேலதிக நலன்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.