2022ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜனநாயக நிலைமை பற்றிய அறிக்கை மார்ச் 20ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில், பெருவாரியான உண்மைகள் மற்றும் ஊடக நிபுணர்களின் கருத்துக்களின் மூலம், கடந்த ஓராண்டில் அமெரிக்க ஜனநாயகத்தின் உண்மையான நிலைமைகள் தொகுக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிலவும் ஜனநாயகப் பிரச்சினைகள், உலகளவில் அமெரிக்கா தனது ஜனநாயக வரையறையின் மூலம் ஏற்படுத்திய குழப்பங்கள் மற்றும் பேரழிவுகள் ஆகியவற்றை இவ்வறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
முன்னுரை மற்றும் முடிவுரை ஆகியவை தவிர, தீரா நோய் போன்ற அமெரிக்காவின் ஜனநாயகம், உலகிற்கு தனது ஜனநாயகத்தைத் திணித்து குழப்பத்தை ஏற்படுத்திய அமெரிக்கா ஆகிய இரண்டு பகுதிகளும் இவ்வறிக்கையில் உள்ளன.
அமெரிக்காவின் ஜனநாயகப் பிரச்சினை அரசியல் மற்றும் சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் பரவியுள்ளது. ஆனால் சொந்த பிரச்சினை மற்றும் அமைப்பு முறை சார் நெருக்கடியைப் பொருட்படுத்தாமல், தனது ஜனநாயகத்தை உலகிற்கான முன்மாதிரியாக கருதும் அமெரிக்கா, பல்வேறு நாடுகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.