Web team
புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
.
நூல் மதிப்புரை
முனைவர் க .பசும்பொன் ,
தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை. கவிஞர் இரா.இரவி அவர்கள் தான் எழுதிய “புத்தகம் போற்றுதும்” எனும் நூலில் அவ்வுலகம், கல்விப்பூங்காவில் சிநதனைப் பூக்கள்,
கவிதைக் களஞ்சியம், இன்று ஒரு தகவல், திருக்குறள் அமைப்பும் அழகும், நேரம்நல்ல நேரம் போன்ற மேலும் 50 தலைப்புகளில் கல்வி,
கவிதை, நேரம், ஆசிரியர் இனத்திற்கு பெருமைசேர்த்தல் போன்ற பல கருத்துக்களை எடுத்துக் கூறும் விமர்சனங்களைத் தந்து முற்போக்குச்
சிந்தனையாளராகவும் சமுதாய அக்கறையும் கொண்டவராகத் திகழ்கிறார்.
முது முனைவர் வெ.இறையன்பு அவர்கள் எழுதிய படைப்பான ‘இவ்வுலகம்’ எனும் நூலில் இரா.இரவிஅவர்கள் “படித்துவிட்டு தூக்கிப் போடும் சராசரி நாவல் அல்ல இது. படித்து விட்டுப் பாதுகாத்து நேரம்கிடைக்கும் போதெல்லாம் மறு வாசிப்பு செய்து நம்மை நாம்
புதுப்பித்துக் கொள்ள உதவும் நாவல்” என்றுபாராட்டிக் கூறுகிறார்.
“தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்ணயிக்கும் சமுதாயச் சிற்பிகள் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ‘சிந்தனைப் பூக்கள்’
காணிக்கை.” என்று கூறிய முனைவர் மூ.இராசாராம் அவர்கள் வரியைப் பார்த்ததும்ஆசிரியர் இனத்திற்கு பெருமை சேர்த்துத் தமது பிறந்த
நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடிய முனைவர்இராதாகிருஷ்ணனும் எனது ஆசிரியர்களும் நினைவுக்கு வந்தார்கள் என்று கூறுவது
கல்வியின் மீதும் ஆசிரியரின்மீதும் இரவி அவர்கள் வைத்திருக்கும் மதிப்பை எடுத்துக்காட்டியிருக்கிறது.
ஜோதிடம் என்பது அறிவியல் அல்ல! அறிவை இழந்தவர்களின் நம்பிக்கை! என்பதை மெய்ப்பிக்கும் நூல்என்று என்றும் அனைவரும்
வாங்கிப் படித்து மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுகூறியிருப்பது அவரின் முற்போக்குச் சிந்தனையையும் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
நகைச்சுவைத் தென்றல் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய ‘ஜெயிக்கப் போவது நீ தான்’எனும் நூலில் நன்றாகப் பேசுபவர்களுக்கு நன்றாக எழுத வராது. நன்றாக எழுதுபவர்களுக்கு நன்றாகப் பேசவராது. என்ற பழமொழியை முறியடிக்கும் வண்ணம் முந்தைய அவரது நூல்களை விஞ்சும் வண்ணம் பேசவும்வரும், எழுதவும் வரும் என்பதைப் பறைசாற்றும் விதமாக இந்நூல் உள்ளது எனக் கூறுவது இவரது
புலமையைஎடுத்துக் கூறுகிறது.
மாணவர்கள் நல்லதைக் கீழே விட்டுவிட்டு மோசமானதைத் தம்முடன் வைத்துக் கொள்ளும் ஜல்லடையாகஇருக்கக் கூடாது. கெட்டதைக் கீழே தள்ளி விட்டு நல்லதை வைத்துக் கொள்ளும் முறமாக இருக்க வேண்டும்என்று இளசை சுந்தரம் அவர்கள் எழுதிய ‘இன்று ஒரு தகவல்’ எனும் நூலைக் குறித்துப் பாராட்டியுள்ளதுஇவரின் சிந்தனைத்திறனை எடுத்துக்காட்டுகிறது.
லேனா தமிழ்வாணன் எழுதிய ‘நேரம் நல்ல நேரம்’ எனும் நூலைப் பற்றி ‘தள்ளிப் போடும் பழக்கம்உள்ளவர்கள் நேரத்தின் கழுத்தை
நெறித்துக் கொள்பவர்கள்’ என்று கவிஞர் இரவி கூறுவது நேரத்தின்அருமையையும், நேரம் ஓர் மூலப்பொருள் என்பதையும் எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது.
இந்நூலில் என்னைக் கவர்ந்த கவிஞர் கவிதாசனின் வைரவரிகள்
“முற்றுப்புள்ளிகளை முயற்சிப் புள்ளிகளாக்கினால்
நீங்களே ஒரு முக்கியப் புள்ளி ஆவீர்கள்”.
“முடங்கிக் கிடந்தால் சிலந்தியும்
உன்னைச் சிறைப் பிடிக்கும்!
எழுந்து நடந்தால் எரிமலையும்
உனக்கு வழிகொடுக்கும்”.
வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலில் 50 ஆசிரியர்களின் நூல்களைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ளநிறை குறைகளைச்
சுட்டிக்காட்டியுள்ள இரா.இரவி அவர்களின் பணி பாராட்டுக்குரியது. மொத்தத்தில் நூல்சிறப்பாக உள்ளது.
—
.