சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில் ஜியாங்ஷி மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், ஜியாங்ஷி மாநிலத்தின் தனிச்சிறப்புகள் மற்றும் மேம்பாடுகளைப் பயன்படுத்தி, உயர்தர வளர்ச்சி, பசுமையான வளர்ச்சி, கரி குறைந்த வளர்ச்சி ஆகிய புதிய கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தின் புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அக்டோபர் 10 முதல் 13ஆம் நாள் வரை, ஜியூஜியாங், ஜிங்தேட்சென், ஷாங்ராவ் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று, யாங்ச்சி ஆற்றங்கரை, தொழில் நிறுவனங்கள், வரலாறு மற்றும் பண்பாட்டுச் சிறப்புமிக்க பகுதி, கிராமப்புறம் முதலியவற்றில் ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
13ஆம் நாள் முற்பகல், ஜியாங்ஷி மாநிலக் கட்சிக் கமிட்டி மற்றும் அரசு வழங்கிய பணியறிக்கையை அவர் கேட்டறிந்து, இம்மாநிலத்தின் பல்வேறு பணிகளில் பெறப்பட்டுள்ள சாதனைகளைப் பாராட்டினர்.