3,000 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பு முடிவின்படி, சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக் குறியீடு 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உயர்ந்துள்ளது. மேலும் துணை குறியீடு மற்றும் பிற குறியீடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டுள்ளதாகவும் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக் குறியீடு முதல் காலாண்டில் 1.3 புள்ளிகள் உயர்ந்தது, இரண்டாவது காலாண்டில் 0.3 புள்ளிகள் சரிந்து, மூன்றாம் காலாண்டில் 0.2 புள்ளிகள் உயர்ந்து 89.2 ஆக இருந்தது.
சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவன சங்கத்தின் பொதுச்செயலாளர் கூறுகையில், தொடர்புடைய கொள்கைகளின் பயனாக, மூன்றாம் காலாண்டின் வளர்ச்சிக் குறியீடு 2022ஆம் ஆண்டின் இருந்ததை விட அதிகமாக உள்ளது. இது கடந்த இரு ஆண்டுகளில் இருந்த மிக உயர் பதிவை நெருங்கியுள்ளது என்று தெரிவித்தார். சில துணை-குறியீடுகளும், நிறுவனங்களின் வளர்ச்சியின் மீதான நம்பிக்கையைக் காட்டுகின்றன. பல்வேறு துறை துணைக் குறியீடுகளில், தொழில்துறை குறியீடு 0.4 புள்ளிகள் உயர்ந்து, மிகப்பெரிய உயர்வைப் பதிவு செய்துள்ளது. இது அதிகரித்த முதலீட்டு விருப்பம் மற்றும் மேம்பட்ட சந்தை எதிர்பார்ப்புகளை குறிக்கிறது. மூன்றாம் காலாண்டின் முடிவில், முழு திறனில் செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை முந்தைய காலாண்டை விட 4.25 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.