மே முதல் நாள் சர்வதேசத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி சார்பாக, சீனாவிலுள்ள பரந்த தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் உழைப்பு எழுச்சியைப் பெரிதும்வெளிக்கொணர்ந்து, உழைப்பைச் சார்ந்து சீன நவீனமயமாக்கலை பயனுள்ள முறையில் முன்னேற்றி, நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியின் புதிய பாதையில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
பல்வேறு நிலை கட்சிக் கமிட்டி மற்றும் அரசுகள் தொழிலாளர்களிடத்தில் உற்சாகத்தையும் புத்தாக்கத்தையும் முழுமையாகத் தூண்ட வேண்டும். மக்களின் சட்டப்பூர்வ உரிமை நலன்களைப் பயனுள்ள முறையில் உறுதி செய்ய வேண்டும். முழு சமூகம் தொழிலாளர்களை மதிக்கும் ஒரு நல்ல சூழ்நிலையை மேலும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.