நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி சம்பத்குமார் அது பற்றி கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் முன்வைத்த விமர்சனங்களால் தவெக தொண்டர்கள் அவரையும் இனி மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராக நினைத்து விலகி செல்வார்கள்.
மாநாடு நடப்பதற்கு முன்பு சீமான் பேசிய பேச்சுக்களுக்கும் மாநாட்டிற்கு பிறகு அவர் பேசிய பேச்சுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உயர்நிலை நிர்வாகிகளுக்கு பல வேலைகள் இருக்கிறது. சீமானை போன்ற பேசுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும்.
அரசியல் எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டு தமிழக வெற்றி கழகம் களமாடி வருகிறது. யாரை விமர்சனம் செய்ய வேண்டும் யாரை கடந்து போக வேண்டும் என்பதை விஜய் எங்களுக்கு உணர்த்தியுள்ளார்.
சீமான் தனது கருத்தை இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை எங்களது மூளைக்குள் கொண்டு போக விரும்பவில்லை. அவரவர் கருத்து அவரவர் உரிமை என்றும், முடிவை தமிழக மக்கள் கரங்களில் கொடுத்துவிட்டு பணியை கவனிப்பதை அனைவருக்கும் நல்லது என சம்பத்குமார் கூறியுள்ளார்.