சீனாவின் சிங் காய்-திபெத் பீடபூமியில் சூழலியல் பாதுகாப்புச் சட்டம், ஏப்ரல் 26ஆம் நாள் நடைபெற்ற 14வது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 2வது கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சீனாவின் உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை வெளியிட்ட மற்றொரு சிறப்புச் சட்டமான இது, உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும், மலை, நீர், காடு, விளை நிலம், ஏரி, மேய்ச்சல் நிலம், மணல், பனி முதலியவற்றுக்கான ஒருமைப்பாட்டுப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் இச்சட்டம் உறுதியாக நிற்கிறது.
சிங் காய்-திபெத் பீடபூமி, உயிரினப் பாதுகாப்புத் தறையில் சிறப்பு தகுநிலை கொள்கிறது. இப்பீடபூமியிலுள்ள உயிரின பல்வகைமையைப் பாதுகாப்பது, இச்சட்டத்துக்கு முக்கிய காரணமாகும்.
மேலும், இப்பீடபூமியில் செழுமையான சுற்றுலா மற்றும் மலைப் பகுதிகள் உள்ளன. சுற்றுலா மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்குலைவுப் பிரச்சினை கவனத்தை ஈர்த்து வருகிறது. இது பற்றிய சிறப்பு விதிகள் இந்தச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன.
இச்சட்டம் இவ்வாண்டின் செப்டம்பர் முதல் நாள் நடைமுறைக்கு வரத் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.