சீனாவிலுள்ள 31 மாநிலங்களில் நிதானமான பொருளாதார நிலைமை

சீனாவிலுள்ள 31 மாநிலங்களில் நிதானமான பொருளாதார நிலைமை

 

சீனாவிலுள்ள 31 மாநிலங்களின் பொருளாதார “அரை ஆண்டு அறிக்கை” அண்மையில் வெளியிடப்பட்டது. இம்மாநிலங்களின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் செயல்பாடு பொதுவாக நிலையானதாகவும் முன்னேற்றத்துடனும் காணப்படுகின்றது.

இவ்வாண்டின் முதல் பாதியில் 16 மாநிலங்களின் பொருளாதார அதிகரிப்பு வேகம், தேசிய சராசரி அளவை விட அதிகமாக இருந்தது. அவற்றில், மேற்குப் பிராந்தியத்தில் 8 மாநிலங்களும், கிழக்குப் பிராந்தியத்தில் 5 மாநிலங்களும், மத்தியப் பிராந்தியத்தில் 2 மாநிலங்களும் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் 1 மாநிலமும் உள்ளன. வளர்ச்சி விகிதத்தில் உள் மங்கோலியா 6.2 விழுக்காட்டுடன் முதலிடத்தையும் சோங்சிங் மற்றும் சிட்சாங் 6.1 விழுக்காட்டுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

தேசிய வளர்ச்சியின் ஒட்டுமொத்த நிலைமையில் பிராந்திய நெடுநோக்கு ஆற்றிவரும் தலைமை பங்கு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதார ஆய்வகத்தைச் சேர்ந்த நில வளர்ச்சி மற்றும் பிரதேசங்களின் பொருளாதார ஆய்வு கூடத்தின் ஒட்டுமொத்த ஆய்வு அலுவலகத்தின் இயக்குநர் ஜியா ரோவ் சியாங் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author