சீனாவின் அன்னாசிப்பழம் ஊர்’ அறுவடைப்பணிகள் தொடங்கியது

 

மார்ச் மாதம் முதல், தென்சீனாவிலுள்ள குவாங்டொங் மாகாணத்தின் சுய்வென் மாவட்டத்தில் அன்னாசிப்பழத்தின் அறுவடைக்காலம் தொடங்கியது. அங்குள்ள பல்வேறு விவசாய பண்ணைகளில் அறுவடைப் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

சீனாவின் அன்னாசிப்பழம் ஊர் என்ற பெருமை பெற்ற சுய்வென் மாவட்டத்தில் சுமார் 100ஆண்டுக்கும் மேலாக அன்னாசிப்பழ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 23ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டுதோறும் 7லட்சம் டன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இது, நாடளவில் முதலிடத்தை  வகிக்கின்றது. சீனாவில் ஒவ்வொரு 3 அன்னாசி பழங்களில் ஒரு பழம் சுய்வென் பகுதியைச் சேர்ந்தது என கருதப்படுகிறது. அன்னாசிப்பழத்தின் புகழ் மற்றும் மதிப்பை அதிகரிக்கும் விதமாக,  இப்பகுதியில் அன்னாசிப்பழங்களின் கடல் என்ற அடையாளச் சின்னம்  உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 30 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெறும் இப்பழத்தின் சாகுடிப் பரப்பளவால் இது அன்னாசிப்பழம் கடல் என அழைக்கப்படுகிறது. இந்த மேம்பாட்டு திட்டம், உள்ளூர் கிராமங்களின் வளர்ச்சிக்கும் துணை புரிகின்றது. உள்ளூர் அரசு, அன்னாசிப்பழத்தை தலைப்பாகவே கொண்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியும், அன்னாசிப்பழம் தொடர்பான சுற்றுலா தொழிலை வளர்க்க முனைப்புடன் செயல்பட்டுகிறது. 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதம், சுய்வென்னில் முதலாவது மாரத்தான் ஓட்டம், அன்னாசிப்பழம் கடல் மண்டலத்தில் நடைபெற்றது. இவற்றின் மூலமாக, உள்ளூரில் வேளாண்மை மற்றும் சுற்றுலா ஒருங்கிணைந்த வளர்ச்சி வாய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சுய்வென்னின் அன்னாசிப்பழம், சீனாவிலும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ரஷியா, ஐரோக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் அன்னாசிப் பழங்களின் ஏற்றுமதி அதிக அளவில் உயர்ந்துள்ளது.

சிறப்புமிக்க அமைவிடம் மற்றும் அதிகமான சுற்றுலா வளம் ஆகிய சாதகங்களால், சீனப் பெருநிலப்பகுதியின் தென்கோடி முனையிலுள்ள நகரம் என்ற பெருமை பெற்றுள்ள சுய்வென் சீனாவின் வாழை ஊர், குவாங்டொங்கின் மிகப் பெரிய தூய்மையான மின் உற்பத்தி தளம் போன்ற பெருமைகளையும் பெற்றுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author