வனுவாட்டு தலைமையமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள வனுவாட்டு தலைமையமைச்சர் சார்லட் சல்வாயுடன்(Charlot Salwai), சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 12ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், பசிபிக் தீவு நாடுகள் பகுதியில் சீனாவுடன் நட்புக் கூட்டாளியாக வனுவாட்டு விளங்குகின்றது.

இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 42ஆண்டுகளில், இரு நாட்டு உறவு உறுதியாக இருந்து வருகின்றது என்று தெரிவித்தார். மேலும், வனுவாட்டுனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சீனா, அரசியலில் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை ஆழமாக்கி, தரமான முறையில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை கூட்டாக கட்டியமைத்து, கைக்கோர்த்து புதிய கால சீன-வனுவாட்டு பொது எதிர்கால சமூகத்தை உருவாக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

சல்வாய் கூறுகையில், ஒரு சிறிய நாடான வனுவாட்டு, பலமுறை சீனாவின் உயர் நிலை அதிகாரிகளுடன் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும் என்றும், பிற நாடுகளைப் போலவே உரிய மரியாதை  அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும், சீனா பெற்றுள்ள சாதனைகளையும் அவர் பாராட்டினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author