2024ஆம் ஆண்டுக்கான உலக சீன மொழி மாநாட்டுக்கும், கன்யூஃசியஸ் கழகம் நிறுவப்பட்டதன் 20ஆம் ஆண்டு நிறைவுக்கும், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 15ஆம் நாள் வெள்ளிகிழமையன்று வாழ்த்து தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், மொழியானது, மனிதர்களுக்கிடையே பரிமாற்றத்துக்கான கருவியாக, நாகரிகத்தை வெளிகொணர்வதிலும், பரஸ்பர புரிந்துணர்வை அதிகரிப்பதிலும் பணியாற்றுகின்றது என்று தெரிவித்தார்.
சர்வதேச சீன மொழி கல்வி பரந்த அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இது, திறப்பு மற்றும் உள்ளடங்கிய தன்மையை வெளிகாட்டியுள்ளது. உலக சீன மொழி மாநாடு, அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்தி புத்தாக்க வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றுவதோடு, தொடர்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்தி, மொழிகளிடையேயான பாலத்தை கட்டியமைக்க முயற்சிக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.