ருவாண்டாவில் புயல் மழை சீற்றத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 8ஆம் நாள், அந்நாட்டு அரசுத் தலைவர் காஜாமேவுக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.
கடந்த சில நாட்களில், ருவாண்டாவில் பல பிரதேசங்கள், புயல் மழையால் பாதிக்கப்பட்டது. கடும் உயிர் சேசம் மற்றும் உடைமை இழப்பு ஏற்பட்டது. சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், உயிரிழந்தோருக்கு ஷிச்சின்பிங் ஆழ்ந்த இரங்கல் செலுத்தினார்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினர், காயமுற்றோர், சீற்றத்தால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். இன்னல்களைச் சமாளித்து, தாயகத்தை ருவாண்டா மீண்டும் கட்டியமைக்கும் என்று நம்பிக்கை கொள்வதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.