2022ஆம் ஆண்டு அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையைச் சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் மார்ச் 28ஆம் நாள் வெளியிட்டது.
அமெரிக்கா மனித உரிமையை மீறியதற்கான உண்மைகள் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மக்களின் உரிமைக்கான திறனற்ற பாதுகாப்பு அமைப்புமுறை, அமெரிக்கத் தேர்தல்களில் உண்மையற்ற ஜனநாயகம், மோசமாகி வருகின்ற இனவெறி பாகுபாடு மற்றும் சமமின்மை, அடித்தட்டு மக்கள் வாழ்வில் கடுமையான நெருக்கடி, மகளிர் மற்றும் குழந்தைகளின் உரிமை பாதுகாப்பு பின்னடைவு, பிற நாடுகளின் மனித உரிமையை மீறுதல், நீதியைச் சீர்குலைப்பது உள்ளிட்ட 7 பகுதிகள் இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க ஜனநாயகம் பொது மக்களின் ஆதரவை இழந்து விட்டது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.