இலங்கையில் 4 மாதங்களில் 70 கோடி டாலர் சுற்றுலா வருவாய்
இலங்கையில் இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில் சுற்றுலா வருவாய் சுமார் 70 கோடி டாலர் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டைக் காட்டிலும் 17.8 விழுக்காடு அதிகம் என்றும் அந்நாட்டு சுற்றுலா வளர்ச்சி ஆணையத் தலைவர் ஃபெர்ணான்டோ தெரிவித்தார்.
முதல் 3 மாதங்களில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 679 பேர் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டதாக சுற்றுலா வளர்ச்சி ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் காலாண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து, 2023இல் 15 லட்சமாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் இலக்கு 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று ஃபெர்ணான்டோ தெரிவித்தார்.