சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், 26ஆம் நாள், சீன கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் லீக்கின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் இலட்சிய எதிர்காலம், இளைஞர்களைச் சார்ந்திருக்கின்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் லீக் மத்திய கமிட்டி, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கோரிக்கையை நடைமுறைப்படுத்தி, புதிய காலத்திலும் புதிய பயணத்திலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த கடமைகளுக்குத் தோள் கொடுத்து, பாரம்பரியத்தைப் பரவல் செய்து, சீர்த்திருதத்தையும் புதுப்பிப்பையும் முன்னெடுத்து, நாட்டின் கட்டமைப்புக்கும் தேசிய மறுமலர்ச்சிக்கும் பாடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
சொந்த வளர்ச்சியுடன், முன்மாதிரியாக பங்காற்றி, சீன கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் லீக் மற்றும் சீன இளைஞர்களுக்கான பணியை முன்னேற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.