சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், கனடா தலைமையமைச்சர் மார்க் கார்னியுடன் அக்டோபர் 31ஆம் நாள் பிற்பகல் தென் கொரியாவில் சந்திப்பு நடத்தினார்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், கனடாவுடன் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, இந்தச் சந்திப்பை வாய்ப்பாக கொண்டு, சீன-கனடா உறவு வெகுவிரைவில் சீரான, நிலையான மற்றும் தொடரவல்ல பாதைக்குத் திரும்புவதை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார். மேலும், இரு தரப்பும் பரஸ்பர நலன் தந்து வெற்றி பெறுவதில் ஊன்றி நின்று, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், எரியாற்றல் உள்ளிட்ட துறைகளில் பயன்தரும் ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கார்னி கூறுகையில், கனடாவின் புதிய அரசு, சீனாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இரு நாட்டுறவின் மேம்பாட்டை வாய்ப்பாக கொண்டு இரு தரப்பு ஒத்துழைப்புகளை மீண்டும் தொடங்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
பல்வேறு துறைகளிலுள்ள பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை மீண்டும் துவங்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                             
                                                         
                                                 
                                                 
                                                