சீனாவின் அறிவுசார் சொத்துரிமை பயன்பாட்டில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளதாகச் சீன அரசவையின் செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நிறுவனங்களில் அறிவுசார் காப்புரிமைகளின் தொழில்மயமாக்க விகிதம் 2024ஆம் ஆண்டில் 53.3விழுக்காட்டை எட்டியுள்ளது.
மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகையில் வருடாந்திர அறிவுசார் சொத்துரிமைப் பயன்பாட்டுக் கட்டணம் 2020ஆம் ஆண்டில் 31940கோடி யுனான் இலிருந்து 2024ஆம் ஆண்டில் 39871கோடி யுனானாக அதிகரித்துள்ளது. ஆண்டுசாராசரி அதிகரிப்பு 5.7விழுக்காட்டை எட்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, தகவல் மற்றும் தொடர்பு, புதிய எரியாற்றல் வாகனம், ஒளிவோல்ட்டா, குவாண்டம் தொழில்நுட்பம், உயிரின மருந்துகள் முதலிய துறைகளில் சீனா முக்கிய தொழில்நுட்ப காப்புரிமைகளைக் கொண்டுள்ளது. உலகின் முன்னணி 5000 சின்னங்களில் சீன சின்னங்களின் மதிப்பு 176000கோடி டாலரைத் தாண்டி உலகின் 2ஆவது இடத்தில் வகித்துள்ளது குறிப்பிபடத்தக்கது.
