சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் மங்கோலிய தலைமை அமைச்சர் ஒயுன் ஏர்டெனைச் சந்தித்துரையாடினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், நீண்டகால அண்டை நட்புறவை வளர்ப்பது, சீனா மற்றும் மங்கோலியாவின் நெடுநோக்கு தேர்வாகும். இது இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது. மங்கோலியாவுடன் இணைந்து, சீன-மங்கோலிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை, மேலும் உயர்ந்த நிலையை நோக்கி முன்னேற்றி, இப்பிரதேசத்துக்கு மேலதிக நிதான மற்றும் உறுதி தன்மையை அதிகரிக்க, சீனா விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.
ஒயுன் ஏர்டென் கூறுகையில், கோவிட்-19 நோய் பரவல் காலத்தில், சீனா தங்கள் தடுப்பூசி உள்ளிட்ட பொருட்களை மங்கோலியாவுக்குக் வழங்கியதை, நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.