இவ்வாண்டின் முற்பாதியில் சீனச் சேவையின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை அதிகரிப்பு

சீன வணிக அமைச்சகம் ஆகஸ்டு 9ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2024ஆம் ஆண்டின் முற்பாதியில் சீனச் சேவை வர்த்தகம் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகின்றது. சேவையின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 3இலட்சத்து 59 ஆயிரத்து 803 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 14 விழுக்காடு அதிகமாகும்.
புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் சேவை ஏற்றுமதித் தொகை, 1இலட்சத்து 46ஆயிரத்து 758 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.7 விழுக்காடு அதிகமாகும். சேவை இறக்குமதித் தொகை 2இலட்சத்து 13 ஆயிரத்து 45 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 16.4 விழுக்காடு அதிகமாகும். சேவை வர்த்தகப் பற்றாக்குறை, 66ஆயிரத்து 287 கோடி யுவானாகும்.

You May Also Like

More From Author