இந்தியாவில் வாட்ஸ்அப்பிற்குப் போட்டியாக, சென்னையைச் சேர்ந்த சோஹோ கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள உள்நாட்டு மெசேஜிங் செயலியான அரட்டை, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை அமைச்சர்களின் பரிந்துரைகளால் தற்போது தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமரின் சுதேசி அழைப்புக்கு இணங்க, இந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலவசமான, எளிதில் பயன்படுத்தக்கூடிய மற்றும் பாதுகாப்பான செயலியைப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாதாரண உரையாடல் என பொருள்படும் அரட்டை செயலியானது, பயனர்களுக்கு மெசேஜ் அனுப்புதல், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், படங்கள், ஆவணங்களைப் பகிர்வது, ஸ்டோரீஸ் உருவாக்குவது மற்றும் சேனல்களை நிர்வகிப்பது போன்ற அனைத்து அடிப்படை அம்சங்களையும் வழங்குகிறது.
வாட்ஸ்அப்புக்கு மாற்றாக வைரலாகும் அரட்டை ஆப் சிறப்பம்சங்கள் என்ன?
