சீனா சந்தை அமைப்பு முறையைப் பயன்படுத்திப் பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைத்து பசுமை மற்றும் குறைந்த கார்பன் வளர்ச்சியை முன்னெடுக்கும் அமைப்பு முறை ரீதியிலான புத்தாக்கம், தேசிய கார்பன் வெளியேற்ற வர்த்தகச் சந்தையாகும். இச்சந்தை நிறுவப்பட்ட சுமார் 2 ஆண்டுகளில், இந்த சந்தையின் மொத்த வர்த்தக அளவு 23.8 கோடி டன்னையும் வர்த்தக தொகை 1091 கோடி யுவானையும் எட்டியுள்ளன.
இதனிடையில், தேசியக் கார்பன் வெளியேற்ற வர்த்தகச் சந்தையின் இயக்கத்துடன், கார்பன் வெளியேற்றக் குறைப்பில் தொழில்நிறுவனங்களின் விழிப்புணர்வு குறிப்பிட்டளவில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி கார்பன் குறைப்பதற்கான விருப்பம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனாவின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.