சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஜூலை 4ஆம் நாள் அஸ்தானாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரைச் சந்தித்தார்。
வாங் யீ கூறுகையில், சுமுகமான அண்டை நட்புறவை முன்னேற்றி, கூட்டு வளர்ச்சியை நனவாக்குவது, சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது.
நெடுநோக்கு ரீதியில் இரு தரப்புறவைக் கருத்தில் கொண்டு, தொடர்பை வலுப்படுத்தி, கருத்து வேற்றுமையை உகந்த முறையில் கையாண்டு, சீன-இந்திய உறவு சீரான பாதையில் முன்னேறுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இவ்வாண்டு பஞ்ச சீலக் கோட்பாடுகள் வெளியிடப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவாகும். இக்கோட்பாடுகளைத் தொடர்ந்து பரவல் செய்யும் பொறுப்பை இரு நாடுகள் ஏற்று, இக்கோட்பாடுகளுக்கு புதிய உள்ளடக்கங்களை உட்புகுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜெய்சங்கர் கூறுகையில், சீராக வளர்ந்து வரும் இந்திய-சீன உறவு இரு தரப்புகளின் நலன்களுக்குப் பொருந்தியதோடு, பிரதேசம் மற்றும் உலகிற்கு நன்மை பயக்கும். சீனாவுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டிய மாபெரும் விருப்பத்தை வழிகாட்டலாக கொண்டு, கருத்து வேற்றுமைகளுக்கு தீர்வு கண்டு, இரு நாட்டுறவில் புதிய அத்தியாயத்தை விரைவில் திறந்து வைக்க இந்தியா விரும்புவதாக தெரிவித்தார்.