பதஞ்சலி ராம்தேவ் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்  

யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மீதான அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
அவர்களின் நிபந்தனையற்ற மன்னிப்பை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
கூடவே நிறுவனம் அதன் தயாரிப்புகள் குறித்து தவறான விளம்பரங்களைச் செய்வதைத் தவிர்க்கும் என்று உத்தரவாதமும் அளித்தது.
ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணாவிடம் இருந்து மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரிய பிரமாணப் பத்திரங்கள், செய்தித்தாள்களில் வெளியான மன்னிப்புக்களைத் தொடர்ந்து சட்டரீதியான நிவாரணம் கிடைத்தது.
அவர்கள் உறுதிமொழியை மீண்டும் மீறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் திறக்கப்படும் என்று எச்சரித்தது.

You May Also Like

More From Author