சீனாவும் நவ்ருவும் தூதாண்மை உறவை மீண்டும் துவங்கும் கூட்டறிக்கையில் இரு நாடுகளும் ஜனவரி 24ஆம் நாள் கையொப்பமிட்டன.
அதையடுத்து, இரு நாடுகள் தூதர் நிலைத் தூதாண்மை உறவை மீண்டும் துவங்கின. இது குறித்து, நவ்ரு வெளியுறவு அமைச்சர் லியோனல் ஐங்கிமியா அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறுகையில், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும்.
இதன் மூலம் நவ்ரு மேலும் வலிமையான வளர்ச்சியை அடையும். சீன விவகாரங்கள் பற்றிய எல்லா தொடர்புகளிலும், ஒரே சீனா என்ற கோட்பாட்டை நவ்ரு பின்பற்றி வருகிறது என்றார்.
மேலும், உலகத்தின் 2வது பெரிய பொருளாதார வல்லரசான சீனா, சர்வதேச மேடையில் முக்கிய பங்காற்றி வருகிறது. சீனாவுடன் ஒத்துழைப்புகளிலிருந்தும், குறிப்பாக சீனா முன்வைத்த உலக மேலாண்மையிலிருந்தும், நவ்ரு நன்மை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.