தேசியப் பாடலான “வந்தே மாதரம்”-மின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தில் நடைபெறும் நீண்ட விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய இந்த பாடலின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விவாதம் நடத்தப்படுகிறது.
இந்த கலந்துரையாடலுக்கு எட்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், மக்களவையில் இன்று பிரதமரின் உரையுடன் விவாதம் தொடங்கும்.
ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை விவாதத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த விவாதத்தில், “வந்தே மாதரம்” பாடல் தொடர்பான பல முக்கியமான மற்றும் அறியப்படாத உண்மைகள் நாட்டு மக்களுக்கு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்: பிரதமர் தொடங்கி வைக்கிறார்
