ஒலிம்பிக் ஒலிபரப்பின் வெற்றி பற்றி பாச் சீன ஊடகக் குழுமத்துக்கு வாழ்த்து

ஒலிம்பிக் ஒலிபரப்பின் வெற்றி பற்றி பாச் சீன ஊடகக் குழுமத்துக்கு வாழ்த்து

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பாச் 12ஆம் நாள் பாரிஸிலிருந்து சீன ஊடகக் குழுமத் தலைவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். அதில், பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒலிபரப்புப் பணியில் சீன ஊடகக் குழுமம் ஈட்டிய மாபெரும் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இப்பணியில் ஈடுபட்ட சீன ஊடகக் குழுமத்தின் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறினார்.
பாச் கூறுகையில், 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, சீன ஊடகக் குழுமம் மிக முக்கியமான பங்கு ஆற்றியுள்ளது. அதன் ஆதரவு மற்றும் முயற்சி இல்லாமல் இருந்தால், நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இவ்வளவு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் கூட்டாளியுறவு மேலும் விரைவு, மேலும் உயர்வு, மேலும் வலிமை, மேலும் ஒற்றுமை என்ற ஒலிம்பிக்கின் பொன்மொழியை போலவே இருக்கும் என்றார்.

You May Also Like

More From Author