பெய்ஜிங்கில் பாலஸ்தீனத்தின் பெரிய நல்லிணக்கம்

Estimated read time 1 min read

பெய்ஜிங்கில் 3 நாட்கள் நடைபெற்ற உள்புற நல்லிணக்கப் பேச்சுவார்த்தையையடுத்து, பிரிவினையை முடித்து பாலஸ்தீனத்தின் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவது தொடர்பான பெய்ஜிங் அறிக்கையில் பாலஸ்தீனத்தின் 14 குழுக்கள் ஜூலை 23ஆம் நாள் கூட்டாகக் கையொப்பமிட்டன.
ஃபத்தாஹ் பிரதிநிதிக் குழுவின் தலைவர் மஹ்மூத் அலுல், ஹமாஸ் பிரதிநிதிக் குழுவின் தலைவர் மூசா முகமது அபு மர்சூக் ஆகியோர் பாலஸ்தீனத்தின் பல்வேறு குழுக்களின் சார்பில் உரை நிகழ்த்தினர்.
அதில், பாலஸ்தீனத்துக்கு நீண்டகாலமாகவும் உறுதியாகவும் ஆதரவு மற்றும் தன்னலமற்ற உதவி அளித்து வரும் சீனாவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், சர்வதேச சமூகத்தில் பாலஸ்தீனத்திற்கான நீதி மற்றும் நியாயத்தைச் சீனா நிலைநாடுவதை வெகுவாகப் பாராட்டினர்.
பாலஸ்தீனப் பிரச்சினை குறித்து, சீனா எப்போதும் அமைதியில் ஊன்றி நின்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையில் புதிய சுற்று மோதல் ஏற்பட்டது முதல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவின் நிலைப்பாட்டைப் பன்முறையாக விளக்கிக் கூறினார். போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், “இரு நாடுகள் திட்டம்” நடைமுறைப்படுத்துவது இப்பிரச்சினைக்கான தீர்வு வழியாகும் என்று வலியுறுத்தி பாலஸ்தீனப் பிரச்சினையைப் பன்முகங்களிலும் நியாயமாகவும் நிலையாகவும் தீர்ப்பதை ஷிச்சின்பிங் முன்னெடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் பெய்ஜிங் அறிக்கையின் குறிப்பிட்ட அமலாக்கத்தில் பல்வேறு குழுக்கள் சில அறைக்கூவல்களைச் சந்திக்கக் கூடும். ஆனால், ஒருமித்த கருத்தை ஒன்றிணைப்பது பாலஸ்தீன விடுதலை லட்சியத்தில் முன்னெடுத்து சென்ற முக்கிய காலடியாக பெய்ஜிங் அறிக்கை விளங்குகின்றது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author