தான்சானிய அரசுத் தலைவர் ஹாசன், 10ஆம் நாள், தாலெஸ்சலாம் நகரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயைச் சந்தித்து பேசினார்.
இப்போது வாங் யீ கூறுகையில்,
சீனாவும் தான்சானியாவும் இன்பத் துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களாக விளங்குகின்றன. இரு நாட்டு மற்றும் இரு கட்சிகளுக்கிடையிலான உறவை சீனா பேணி மதிப்பிட்டு வருகின்றது. தான்சானியாவுடன் இணைந்து, இரு நாட்டு தலைவர்களின் பொதுக் கருத்துகளை நடைமுறைப்படுத்தி, ஆட்சி முறை அனுபவங்கள் குறித்து பரிமாற்றி, நடைமுறை ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, மனித பண்பாட்டு தொடர்பை வலுப்படுத்தி, சீன-தான்சானிய பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகின்றது. இரு நாட்டு ஒத்துழைப்பின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றி, தான்சானியா உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளின் மக்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்றார்.
