சுற்றுச் சூழல் பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கு சீன அரசுத் தலைவர் ஊக்கம்

 

சீனத் தேசிய உயிரின தினத்தை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், ஹூபெய் மாநிலத்தின் ஷ்யென் டான்ஜியாங்கோ நீர்தேக்கத்தில் சேவை புரியும் தன்னார்வலர்களுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் அவர்களுக்கு ஊக்கமளித்தார். தேசியளவில் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் முதலியோருக்கு வணக்கங்களையும் அவர் தெரிவித்தார்.

தன்னார்வலர்கள் எழுச்சியை அனைவரும் தொடர்ந்து வெளிகொணர வேண்டும். மேலதிகமான மக்களுடன் இணைந்து, நீரைச் சிக்கனப்படுத்தி பாதுகாக்க வேண்டும். பசுமையான மலைகள், தூய்மையான நீர், அருமையான காற்று ஆகியவை கொண்ட அழகான சீனாவின் கட்டுமானத்தை அனைவரும் இணைந்து கட்டமைக்க வேண்டும். மனிதர் மற்றும் இயற்கையுடன் நல்லிணக்கமாக பழகும் நவீனமயமாக்கத்திற்கு பங்காற்ற வேண்டும் என்றார் அவர். 

You May Also Like

More From Author