அமெரிக்கா, கூடிய விரைவில் தைவானுக்கு ஆயுதங்களை ஒப்படைக்கும். 3வது தரப்பு மூலம் தைவானுக்கு ஆயுத விற்பனைக்கான வாய்ப்பையும் அமெரிக்கா தேடுகிறது என்று அமெரிக்க நாடாளுமன்ற கீழவையின் வெளிவிவகார ஆணையத்தின் தலைவர் மக்கோல் அண்மையில் தெரிவித்தார். இது குறித்து சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ச்சு ஃபாங் லியேன் பதிலளிக்கையில், அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த சிலர், தைவான் பிரிவினைவாதிகளுக்கு மீண்டும் மீண்டும் தவறான சமிக்கையைக் கொடுப்பது, தைவான் நீரிணை பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.