தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு தினம் (ஜனவரி 26), உலக தண்ணீர் தினம் (மாா்ச் 22 ), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மகாத்மா காந்தி பிறந்தநாள் (அக்டோபர் 2), உள்ளாட்சிகள் தினம் (நவம்பர் 1) ஆகிய தினங்களில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகள், எதிா்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், 100 நாள் வேலை திட்டம், ஜல் ஜீவன் திட்டம் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் விதமாக இடம் மற்றும் நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.