நான்குநேரியை அடுத்த செண்பகராமநல்லூர் செண்பகவல்லித் தாயார் சமேத ஜெகநாத பெருமாள் கோவில் வருஷாபிஷேக வைபவம் சிறப்பாக நடந்தது.
நான்குநேரியை அடுத்த செண்பகராமநல்லூர் கிராமத்தில் ஸ்ரீ செண்பகவல்லித் தாயார் சமேத ஜெகநாத பெருமாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். கடந்த ஆண்டு புணரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
இதையடுத்து அதே தினமான நேற்று காலையில் இக்கோயிலில் வருஷாபிஷேக வைபவம் சிறப்பாக நடந்தது . இதில் நேற்று முன்தினம் மாலையில் விதிவசேனர் பூஜை, புண்ணிய வசனம், யாகசாலை ஹோமம், புர்ணகுதி, திருவாரணம், கோஷ்டியும், மூலவர் சகல மூர்த்திகளுக்கும் திரவியங்டம் பூஜைகளுடன் வருஷாபிஷேக வைபவம் ஆரம்பமானது.
தொடர்ந்து நேற்று காலையில் திருமஞ்சன அபிஷேகமும், ஆச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க புர்ணகுதி நடந்தது. தொடர்ந்து மேளதாளங்களுடன் யாகசாலையில் இருந்து புனித நீர் நிரப்பப்பட்ட கடம் புறப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் உற்றப்பட்டு வருஷாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
தொடர்ந்து ஜெகநாத பெருமாள், செண்பகவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது, மாலையில் நாட்டிய நாடகம், பரத நாட்டியம் நடந்தது. பின் சுவாமி வீதி உலா வைபவம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
பட விளக்கம்.
செண்பகராமநல்லூர் செண்பகவல்லித் தாயார் சமேத ஜெகநாத பெருமாள் கோவில் வருஷாபிஷேக வைபவத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.