வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- மக்களுக்கு எச்சரிக்கை

Estimated read time 0 min read

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்த கன மழையால் வராக நதி ஆற்றில் மூன்று தினங்களுக்கு முன்பாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்து. இதனைத் தொடர்ந்து சற்று மழைப் பொழிவு குறைந்ததால் வராகநதி ஆற்றில் நீர் வரத்து குறைந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான சோத்துப்பாறை அணை வனப்பகுதி, கல்லாறு வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, செழும்பாறு வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் கனமழை பெய்து வந்தது.

இந்த கன மழையால் கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பு ஆறு உள்ளிட்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த ஆறுகளில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் ஒன்றிணைந்து செல்வதால் பெரியகுளம் வராக நதி ஆற்றில் பெரும் வெள்ளப்பருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author