தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியாக இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் ஆட்தேர்வு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கடந்த ஜூன் 9ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது.
பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை அடிப்படையாக கொண்ட இந்த தேர்வில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வழக்கமாக, இதுபோன்ற தேர்வுகளின் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் வெளியிட்டுவிடும்.
ஜனவரி 2025க்கு பிறகே குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்
