விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் 6 முதல் விண்வெளியில் சிக்கியுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸை போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் அல்லது ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் கேப்ஸ்யூல் மூலம் பூமிக்கு கொண்டு வருவதற்கான இறுதி முடிவை நாசா சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எட்டு நாட்கள் தங்கியிருப்பது போல் வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரின் பயணம் திட்டமிடப்பட்ட நிலையில், அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் விண்வெளியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.