இரண்டு நாள் போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு உக்ரைனுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் இவர்தான்.
போலாந்திலிருந்து 10 மணிநேர ரயில் பிரயாணத்தின் மூலம் உக்ரைன் தலைநகர் கீவை சென்றடைந்தார் பிரதமர் மோடி.
அங்கே அவரை உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கைகுலுக்கி வரவேற்றார்.
பிரதமர் மோடி காலை 7:30 மணியளவில் (உள்ளூர் நேரம் கியேவுக்கு) வந்து, காலை 7:55 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஹோட்டலுக்கு சென்றடைந்தார்.
கீவ் வந்தடைந்த பிரதமரை, புலம்பெயர்ந்த இந்தியர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ முழக்கங்களுடன் வரவேற்றனர்.
