இஸ்ரோ உருவாக்கிய 4,700 கிலோ எடையுள்ள ஜிசாட் 20 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள கேப் கேனரவல் ஏவுதளத்திலிருந்து, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), தகவல் தொடர்பு நெட்வொர்க்கை மேம்படுத்த GSAT 20 செயற்கைக்கோளினை வடிவமைத்துள்ளது. இதன் எடை 4,700 கிலோ.
இதன் அதிக எடை காரணமாக இஸ்ரோவின் உள்ளூர் ராக்கெட்டுகளால் இதனை விண்ணில் செலுத்துவது சிரமம்.
இதனால்தான், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை இஸ்ரோ நாடியது.
ISROவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட Space X, செயற்கைக்கோளை தங்களுடைய பால்கன் 9 ராக்கெட்டின் மூலம் இன்று விண்ணில் ஏவியது.