ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமான வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு முதல் 8 பேர் பலியாகியுள்ளனர்.
வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்துவரும் இடைவிடாத மற்றும் தொடர் மழை, வெள்ளிக்கிழமை இரவு முதல் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில், குறிப்பாக விஜயவாடாவில் இயல்பு வாழ்க்கையை பாதித்தது.
விஜயவாடாவில் உள்ள சுன்னப்புபட்டிலா சென்டரில் உள்ள வீட்டின் மீது பாறாங்கல் ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
குண்டூர் மாவட்டம் உப்பலபாடு என்ற இடத்தில் ஒரு ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்களை காருடன் வெள்ளம் அடித்துச் சென்ற மற்றொரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும், மங்களகிரி கந்தலய்யபேட்டாவில் மற்றொரு நிலச்சரிவில் மூதாட்டி உயிரிழந்தார்.