சீன ஊடகக் குழுமத்துக்கு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழு நன்றி

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழு தலைவர் டோனி எஸ்டாங்குவெட் ஆகஸ்டு 23ஆம் நாள், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியொங்கிற்கு அனுப்பிய கடிதத்தில், பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீன ஊடகக் குழுமத்தின் ஒளிப்பரப்பு வெற்றி பெற்றததற்கு வாழ்த்து தெரித்ததோடு, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழுவுக்கான சீன ஊடகக் குழுமத்தின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.


பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழு மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் கூட்டு முயற்சிகளுடன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றி பெற்றது.

சீன ஊடகக் குழுமத்தின் ஒளிப்பரப்பின் மூலம், சீன ரசிகர்கள் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு, உலகளவிலான மக்கள் இவ்விளையாட்டுப் போட்டியில் கவனம் செலுத்தினர் என்று இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author