14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் சுங்கத் துறையின் கண்காணிப்பின் கீழ் நாடளவில் ஆண்டுதோறும் சராசரியாக 520 கோடி டன் எடையுள்ள சரக்குகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 41 இலட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானாகும். இந்த அளவு உலகில் முதலிடம் வகிக்கின்றது என்று சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் இயக்குநர் சுன் மேச்சுன் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
சீன சுங்கத்துறையின் நவீனமயமாக்கம் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இக்காலக்கட்டத்தில் சீனா முழுவதிலும் புதிதாக கட்டியமைக்கப்பட்ட அல்லது விரிவாக்கப்பட்ட நுழைவாயில்களின் எண்ணிக்கை 40 ஆகும். இதுவரை சீனாவில் மொத்தம் 311 நுழைவாயில்கள் உள்ளன. கிழக்கு, மத்தியம் மற்றும் மேற்கு பிரதேசங்களில் நீர், தரை மற்றும் வான் வழியாக, பன்னோக்க வெளிநாட்டுத் திறப்புக் கட்டமைப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
