நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில், ஆந்திர துணை முதல்வர் மற்றும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மையல்ல எனத் தெரியவந்துள்ளது.
பவன் கல்யாண் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரகசியமாக நடித்து முடித்துவிட்டதாக தமிழ் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன.
இது குறித்து Gulte செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி பவன் கல்யாணுக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் விசாரித்தபோது, அந்தத் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளே என்று அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
படக்குழுவினர் அவரை அணுகியது உண்மைதான் என்றாலும், அவரது அரசியல் காரணங்களால் அந்தப் பேச்சுவார்த்தை இறுதி வடிவம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் பவன் கல்யாண் நடிக்கிறாரா??
