விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுா்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்காக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.