வேட்டையன் பட டப்பிங் பணிகளை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த்  

வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கியுள்ளதாக லைகா புரடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.

ஜெய் பீம் படம் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தை லைகா புரடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் அக்டோபர் 10 அன்று திரைக்கு வர உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையொட்டி படத்தின் இறுதிக்கட்ட பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

You May Also Like

More From Author