ஆப்பிரிக்க கூட்டாளிகள் ஊடக நடவடிக்கை பெய்ஜிங்கில் துவக்கம்

ஆப்பிரிக்க கூட்டாளிகள் எனும் ஊடக நடவடிக்கை ஆகஸ்ட் 31ஆம் நாள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீன ஊடக குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, சீன-ஆப்பிரிக்க ஊடகத் துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, எண்முறைக் காலத்தில் நாகரிகங்களிடையேயான பரிமாற்றம் மற்றும் பரஸ்பரக் கற்றலை முன்னெடுக்கும் விதமாக நடத்தப்பட்டது.

சீனா மற்றும் 20க்கும் அதிகமான ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சர்வதேச அமைப்புகள், ஊடகங்கள், சிந்தனைக் கிடங்குகள் ஆகியவற்றைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.


உகாண்டா குடியரசு , மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சீசெல்சு குடியரசு ஆகிய நாடுகளின் தலைவர்கள் காணொளி வழியாக இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு சீன-ஆப்பிரிக்க ஊடகத் துறையிலான பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தவும் விருப்பம் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author