டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு  

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி பதவியேற்கவுள்ளார்.

செவ்வாய்கிழமையன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது பெயரை தனது வாரிசாக முன்மொழிந்ததை அடுத்து கட்சி ஒருமனதாக ஒப்புக்கொண்டது.

காலை 11.20 மணியளவில் கெஜ்ரிவால் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக இந்த கூட்டம் ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தீப் பதக் உரையுடன் தொடங்கியது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான விஜய் சிங் மற்றும் திரிப்தா சிங் தம்பதியருக்கு 1981ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி பிறந்த அதிஷி பஞ்சாபி ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

You May Also Like

More From Author